சட்டம்

'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்!'
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

வியாழன், 21 அக்டோபர், 2010

கல்வியின் மூலமே வறுமையை நீக்க முடியும்.

சேமிக்க வழியின்றி வீணாகும் உணவு தானியங்களை வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு விநியோகிக்கும்படி உச்ச நீதிமன்றம்  மத்திய அரசுக்கு உத்திரவிட்டுள்ளது. இது சம்பந்தமான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த உணவு தானியங்களை இலவச மதிய உணவு திட்டத்திற்கு வழங்கினால் அதன் மூலம் பள்ளி செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையை கூட்ட முடியும், தானியங்களும் வீணாகாது, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்குவதாகவும் இருக்கும். எல்லா மாநிலங்களிலும் இலவச மதிய உணவு திட்டத்தை இதற்காக அமல் படுத்தும்படி மத்திய அரசு வேண்டுகோள் விடுக்கலாம். கல்வியின் மூலமே வறுமையை நீக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக