சட்டம்

'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்!'
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

வெள்ளி, 4 அக்டோபர், 2013

காசோலை வழக்குகள் இனி இரண்டாவது சட்ட அறிவிப்பின் பேரிலும் தாக்கல் செய்யலாம்.

உச்ச நீதி மன்றம் 1998ல் இருந்து பின்பற்றி வந்த முறையை மாற்றி தீர்ப்பளித்துள்ளது. இனிமேல் காசோலை வழக்குகளை இரண்டாவது முறை கொடுக்கப்படும் அறிவிப்பின் பேரிலும் தாக்கல் செய்யலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் காசோலை வழக்குகளை முதல் முறை கொடுத்த அறிவிப்பின் பேரிலேயே தாக்கல் செய்ய வேண்டும் என்று இதுவரை இருந்த நிர்பந்தத்தை மாற்றியுள்ளது. இதனால் காசோலை வழக்குகள் தாக்கல் செய்வது குறையலாம் என்றும் நீதி மன்றங்களில் காசோலை வழக்குகளின் சுமை ஓரளவு குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீர்ப்பினை காண இணைப்பை சொடுக்கவும்:

Link: http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=39586