சட்டம்

'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்!'
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் 'பிரதாப முதலியார் சரித்திரம்'.


1879 ல், அதாவது   சுமார் 130  வருடங்களுக்கு முன்பு, தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் 'பிரதாப முதலியார் சரித்திரம்'. இதை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று அழைக்கப்பட்ட சாமுவேல் வேதநாயகம் பிள்ளை. இவர் ஒரு தமிழ் கிறித்தவர். பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வமுடையவர். அதை இந்த நாவலில் சித்தரித்திருக்கிறார். படிக்கச் சிறந்த நாவல் இது. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு இதை புத்தக வடிவில் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது இது ebook வடிவில் கிடைத்ததால் மீண்டும் ஒருமுறை படித்துக் கொண்டிருக்கிறேன். 
நீங்களும் படிக்க இதனுடன் உள்ள இணைப்பை சொடுக்கவும்.

Click to open:

2 கருத்துகள்:

ANKITHA VARMA சொன்னது…

130 ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்டாலும், செந்தமிழில் எழுதப் பட்டு இருப்பது சிறப்பு, ஆச்சரியம் தருகிறது.

Robin சொன்னது…

தகவலுக்கு நன்றி!

கருத்துரையிடுக