சட்டம்

'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்!'
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

புதன், 13 ஏப்ரல், 2011

எழுதப்பட்ட மையின் வயதை கண்டறிய முடியும் - சென்னை உயர்நீதி மன்றம்.

பெரும்பாலும் காசோலை வழக்குகளில் அவற்றை பூர்த்தி செய்ய உபயோகித்த மையின் வயதை கொண்டு வழக்கை நிரூபிக்க வழக்கறிஞர்கள் முயற்சி செய்வர். இதுநாள் வரை அவ்வாறு எழுத உபயோகித்த மை எந்த வருடத்தை சேர்ந்தது என்பதை கண்டறிய சென்னை பரிசோதனை ஆய்வகத்தில் வசதிகள் இல்லை என்ற அடிப்படையில் மேற்படி பரிசோதனைக்கு அனுப்பக் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை  சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து வந்தது. ஆனால் அவ்வாறு மையின் வயதை கண்டுபிடிக்கும் வசதி ஹைதரபாத் அரசு பரிசோதனைக் கூடத்தில் உள்ளது என்ற அடிப்படையில் சமீபத்தில் ஒரு தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மனுவை அனுமதித்துள்ளது. அந்த தீர்ப்பின் முழு  வடிவமும் காண கீழே உள்ள எனது மற்ற வலை தளங்களை பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக