சட்டம்

'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்!'
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

புதன், 3 நவம்பர், 2010

காசோலை வழக்குகளில் சமரசம் - உச்ச நீதிமன்ற நிபந்தனைகள்.

காசோலை மோசடி வழக்குகளில் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொள்வதற்கு சில வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. தற்போது காசோலை வழக்குகளை சில பல வருடங்கள் இழுத்தடித்து பின்னர் இறுதியில் உச்ச நீதிமன்றம் வரை வழக்காடிவிட்டு சமரசம் செய்து கொள்ளும் வழக்கம் பல வழக்காடிகளால் பின்பற்றப்படுகிறது. இதை தடுக்க உச்ச நீதிமன்றம் தற்போது  ஓன்று அல்லது இரண்டு வாய்தாக்களில் கீழமை நீதிமன்றத்திலேயே சமரசம் செய்து கொள்ளலாம்  எனவும் பின்னிட்டு அமர்வு அல்லது உயர் நீதி மன்றத்தில் சமரசம் செய்து கொள்ள காசோலை தொகையில்  15%மும், உச்ச நீதிமன்றத்தில் 20%மும்,  அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல் ஒரே பரிவர்த்தனைக்கு (தவணை திட்டங்கள்)  வழங்கப்பட்ட பல காசோலைகளை வைத்து பல வழக்குகள் தாக்கல் செய்யும் புகார்தாரர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் முழு விபரமும் அறிய கீழுள்ள வலைத்தளங்களை சொடுக்கவும்:



www.vskesavan.blogspot.com
www.thevsklawfirm.blogspot.com
www.thevsklawfirmdeeds.blogspot.com
http://thevsklawfirmfamilylaw.blogspot.com/

2 கருத்துகள்:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

உபயோகமான பதிவு .
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள் .

Unknown சொன்னது…

நல்ல தகவல்! தொடரட்டும் உமது தொண்டு!

கருத்துரையிடுக