சட்டம்

'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்!'
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

வியாழன், 30 செப்டம்பர், 2010

தன்னைத்தானே மோகித்தவன்...

தன்னைத்தானே மோகித்தவன் பற்றி ஒரு கதை உண்டு. 

கண்ணாடி கண்டுபிடிக்கப்படாத காலத்தில் தன் முகத்தை தண்ணீரில் பார்த்து, அதன் அழகில் மயங்கி, மோகித்து, அந்த முகத்தை தேடி அலைந்தானாம் ஒருவன்...

அது போல் தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களையே பரப்பி வரும் இந்திய ஊடகங்கள் தங்கள் கருத்துக்களை தாங்களே நம்பி, மோகித்து,  எதிர்மறை எண்ணங்களோடு அலைந்து கொண்டிருக்கின்றன...

இன்று, அயோத்தி விவகாரத்தில்,  அலகாபாத் உயர் நீதி மன்ற தீர்ப்பிற்கு அவை கொடுத்த தேவையற்ற, அபாயகரமான எதிர்மறை எண்ணவோட்டங்களை இந்திய மக்கள் புறந்தள்ளிவிட்டது மிகுந்த நம்பிக்கையை தருகிறது...

இனியாவது ஊடகங்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஆக்கப்பூர்வமான   செய்திகளை தரும் என்ற நம்பிக்கையோடு எதிர்கொள்வோம் எதிர்காலத்தை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக