பெரும்பாலும் காசோலை வழக்குகளில் அவற்றை பூர்த்தி செய்ய உபயோகித்த மையின் வயதை கொண்டு வழக்கை நிரூபிக்க வழக்கறிஞர்கள் முயற்சி செய்வர். இதுநாள் வரை அவ்வாறு எழுத உபயோகித்த மை எந்த வருடத்தை சேர்ந்தது என்பதை கண்டறிய சென்னை பரிசோதனை ஆய்வகத்தில் வசதிகள் இல்லை என்ற அடிப்படையில் மேற்படி பரிசோதனைக்கு அனுப்பக் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து வந்தது. ஆனால் அவ்வாறு மையின் வயதை கண்டுபிடிக்கும் வசதி ஹைதரபாத் அரசு பரிசோதனைக் கூடத்தில் உள்ளது என்ற அடிப்படையில் சமீபத்தில் ஒரு தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மனுவை அனுமதித்துள்ளது. அந்த தீர்ப்பின் முழு வடிவமும் காண கீழே உள்ள எனது மற்ற வலை தளங்களை பார்க்கவும்.
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு - குறள். (நீதி தவறாமல் பிறர்க்குப் பயன்பட வாழ்வோரின் பண்பை உலகத்தார் போற்றுவர்).
சட்டம்
'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்!'
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
புதன், 13 ஏப்ரல், 2011
எழுதப்பட்ட மையின் வயதை கண்டறிய முடியும் - சென்னை உயர்நீதி மன்றம்.
சனி, 15 ஜனவரி, 2011
பொங்குக பொங்கல்…
பொங்கட்டும்
பொங்கல்
எங்கும்...
தங்கட்டும்
இன்பம்
என்றும்...
ஞாயிறு, 19 டிசம்பர், 2010
தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் 'பிரதாப முதலியார் சரித்திரம்'.
1879 ல், அதாவது சுமார் 130 வருடங்களுக்கு முன்பு, தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் 'பிரதாப முதலியார் சரித்திரம்'. இதை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று அழைக்கப்பட்ட சாமுவேல் வேதநாயகம் பிள்ளை. இவர் ஒரு தமிழ் கிறித்தவர். பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வமுடையவர். அதை இந்த நாவலில் சித்தரித்திருக்கிறார். படிக்கச் சிறந்த நாவல் இது. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு இதை புத்தக வடிவில் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது இது ebook வடிவில் கிடைத்ததால் மீண்டும் ஒருமுறை படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் படிக்க இதனுடன் உள்ள இணைப்பை சொடுக்கவும்.
Click to open:
லேபிள்கள்:
'பிரதாப முதலியார் சரித்திரம்,
1879,
நாவல்,
மாயூரம் வேதநாயகம் பிள்ளை,
ebook
புதன், 3 நவம்பர், 2010
காசோலை வழக்குகளில் சமரசம் - உச்ச நீதிமன்ற நிபந்தனைகள்.
காசோலை மோசடி வழக்குகளில் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொள்வதற்கு சில வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. தற்போது காசோலை வழக்குகளை சில பல வருடங்கள் இழுத்தடித்து பின்னர் இறுதியில் உச்ச நீதிமன்றம் வரை வழக்காடிவிட்டு சமரசம் செய்து கொள்ளும் வழக்கம் பல வழக்காடிகளால் பின்பற்றப்படுகிறது. இதை தடுக்க உச்ச நீதிமன்றம் தற்போது ஓன்று அல்லது இரண்டு வாய்தாக்களில் கீழமை நீதிமன்றத்திலேயே சமரசம் செய்து கொள்ளலாம் எனவும் பின்னிட்டு அமர்வு அல்லது உயர் நீதி மன்றத்தில் சமரசம் செய்து கொள்ள காசோலை தொகையில் 15%மும், உச்ச நீதிமன்றத்தில் 20%மும், அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல் ஒரே பரிவர்த்தனைக்கு (தவணை திட்டங்கள்) வழங்கப்பட்ட பல காசோலைகளை வைத்து பல வழக்குகள் தாக்கல் செய்யும் புகார்தாரர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் முழு விபரமும் அறிய கீழுள்ள வலைத்தளங்களை சொடுக்கவும்:
www.vskesavan.blogspot.com
www.thevsklawfirm.blogspot.com
www.thevsklawfirmdeeds.blogspot.com
http://thevsklawfirmfamilylaw.blogspot.com/
www.vskesavan.blogspot.com
www.thevsklawfirm.blogspot.com
www.thevsklawfirmdeeds.blogspot.com
http://thevsklawfirmfamilylaw.blogspot.com/
புதன், 27 அக்டோபர், 2010
CANDIDATES SHORT LISTED FOR VIVA VOCE
DIRECT RECRUITMENT TO THE POST OF DISTRICT JUDGE
(ENTRY LEVEL) - CANDIDATES SHORT LISTED FOR
VIVA VOCE
to see the list of candidates click the link below:
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)